சொத்து பரிவர்த்தனையை சுமூகமாக்கும் பாகப்பிரிவினை


பூர்வீக சொத்துக்கள் பாகப்பிரிவினை மூலமாக குடும்ப உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. அப்படி பாகப்பிரிவினை மேற்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினையும், மனஸ்தாபமும் ஏற்படுகிறது. அதிலும் குடும்ப தலைவர் இல்லாதபட்சத்தில் வாரிசுகளுக்கிடையே சொத்தை பிரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இறந்தவரின் வாரிசுகள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்கு வாரிசு சான்றிதழ் அவசியம். அதன் மூலமே தாங்கள்தான் இறந்தவரின் வாரிசுகள் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியும். சொத்தை பாகப்பிரிவினை செய்யவும் முடியும். அடுத்த தலைமுறையினர் பிரச்சினையின்றி சொத்துக்கு உரிமை கொண்டாட ஏதுவாகவும் அமையும்.

அத்துடன் சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் சிக்கலின்றி பரிவர்த்தனை மேற்கொள்ள இயலும். ஏனெனில் ஒருவரிடம் இருந்து சொத்து வாங்கும்போது அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடும் வாரிசுகள் எத்தனை பேர் என்பதை வாரிசு சான்றிதழ்கள் மூலமே உறுதி செய்ய முடியும். இவர்கள்தான் வாரிசுகள் என்பது தெரிந்து இருந்தாலும் வாரிசு சான்றுதான் சட்டரீதியாக உரிமையை நிலைநாட்டுவதாக அமையும். ஆகவே சொத்தை பாகப்பிரிவினை செய்வதாக இருந்தாலோ, விற்பனை செய்வதாக இருந்தாலோ வாரிசு சான்றிதழ் இருப்பது அவசியம்.

பின்னூட்டமொன்றை இடுக