வாஸ்து முறையில் வீடு அமைக்க விதிமுறைகள்


201602261651129192_The-new-strategy-is-to-strap-the-water-household-plants_SECVPF

வீட்டை ஆழகாக வடிவமைத்து கட்டினாலும் அறைகள் எந்த திசையில், எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் வகுத்துள்ளது. வீட்டின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பட்டியலிடுகிறது.

அப்படி வாஸ்து முறைப்படி வீடு கட்டுவதாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பார்ப்போம்.

 • வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். அதனால் பிரச்சினை எதுவும் இல்லை. வீட்டுமனைகள் முக்கோண வடிவில் இருந்துவிடக்கூடாது. அதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
 • மனை சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது நல்லது.
 • தெற்கு, மேற்கு திசை பார்த்த மனையை காட்டிலும், வடக்கு, கிழக்கு திசை பார்த்த மனையை தேர்வு செய்வது சிறந்தது.
 • ஈசானியம் மட்டும் குறைந்த நிலையில் இருக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • வீட்டின் தனப்பகுதிக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசானிய திசைகள் பள்ளமாக இருக்கும்படி சரி செய்து கொள்ள வேண்டும்.
 • மேற்கு, தெற்கு, தென்மேற்கு கன்னி மூலையை மேடாக அமைக்க வேண்டும்.
 • கிழக்கு வடக்கு திசைகளில் அதிகமான காலி இடம் விட வேண்டும்.
 • பூமிபூஜை செய்து அஸ்திவாரம் தோண்டும் போது வடகிழக்கு திசையான ஈசான மூலையில் இருந்து பணியை தொடங்க வேண்டும்.
 • கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசைகளில் கிணறு, பள்ளம் இருந்தால் அதை மண்கொண்டு நிரப்பி சரி செய்ய வேண்டும்.
 • தென்கிழக்கு மூலையில் சமையல் அறையை கிழக்கு பார்த்தவாறு அமைப்பது சிறந்தது.
 • படுக்கை அறையை தென்மேற்கு பகுதியில் அமைக்கலாம்.
 • வீட்டின் பரண்கள் தெற்கு, மேற்கு சுவர்களில் தான் அமைய வேண்டும்.
 • வீடு கட்டுமான பணிக்கு ஆழ்துளைகிணறு தோண்டுவதாக இருந்தால் ஈசானிய திசையில் பணியை மேற்கொள்ள வேண்டும். அல்லது சிறிய பள்ளம் தோண்டி தண்ணீரை தேக்கி வைப்பதாக இருந்தாலும் ஈசானிய மூலையிலேயே நீரை தேக்கி கட்டுமான பணிக்கு பயன்படுத்த வேண்டும்.
 • வீட்டு வாசலில் அங்குலம் வரை சுவர் அமைத்து அதன்பிறகு மற்ற பணிகளை மேற்கொள்வது நல்லது.
 • வீட்டு வாசல்படி, ஜன்னல், அலமாரி, கதவுகளை ஒன்றுக்கு ஒன்று நேராக வைப்பது நல்லது.
 • வீட்டு கட்டுமான பணிகளூக்கு கொண்டு வரப்படும் ஜல்லிக்கற்கள், செங்கல்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை தெற்கு, மேற்கு திசைகளில் குவித்து வைக்க வேண்டும்.
 • Publish Free Real Estate ads in online

வாஸ்து முறையில் வீடு அமைக்க விதிமுறைகள்\

இலவச தமிழ் விளம்பரம் எதையும் சுலபமாக வாங்க விற்க

Advertisements

4 thoughts on “வாஸ்து முறையில் வீடு அமைக்க விதிமுறைகள்

 1. எனது மனை கிழக்கு மேற்கு நீலம் 60அடி, தெற்கு வடக்கு அகலம் 20 அடி உள்ளது , எனக்கு படுக்கை அரை-2, பூழை அரை- 1 , சமையல் அரை -1 , குளியல் அரை-1, hall-1 , அமைக்க வேண்டும் உதவி செய்யுங்கள்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s