150 படங்களில் நடித்த ராஜேஷ்: கை கொடுத்த தொழில் ‘ரியல் எஸ்டேட்’

நடிகர் ராஜேஷ் 150 படங்களுக்கு மேல் நடித்தவர். எனினும், அவருக்கு தக்க சமயத்தில் கை கொடுத்து, அவரை வளமான வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றது வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்கும் ‘ரியல் எஸ்டேட்’ தொழிலாகும்.

பட உலகில் புகழ் பெற்று விளங்கியபோதே, எதிர்பாராமல் ஏற்பட்ட கடன் தொல்லையால், பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து கட்டிய வீட்டை விற்று, கடனை அடைத்தார், ராஜேஷ்.

கடனை தீர்த்தபின், மீதி இருந்த சிறு தொகையை ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்ய விரும்பினார். `எந்தத் தொழிலை தேர்ந்து எடுக்கலாம்’ என்று அவருக்குள் ஒரு மனப்போராட்டமே நடந்தது.

அந்த சமயத்தில் ராஜேசுக்கு கைகொடுத்தது ‘ரியல் எஸ்டேட்’ தொழில்தான். 1992-ம் ஆண்டு ‘ஜே.எஸ்.ஆர்’ என்கிற பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலை ராஜேஷ் ஆரம்பித்தார். நடிகர் கமலஹாசன் குத்துவிளக்கு ஏற்றி, அந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். தற்பொழுது ரியல் எஸ்டேட் பிசினசில் ராஜேஷ் புகழ் பெற்று விளங்குகிறார்.

இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது:-

‘நான் வீட்டை விற்றதும் என்னைப் பார்த்து பதறியவர்கள் நடிகர் கமலும், ஜேப்பியாரும்தான். கமல் என்னிடம் வந்து, ‘படம் எடுங்கள். நான் நடித்து தருகிறேன்’ என்றார். ஆனால், ‘இயக்குனராக வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு இருக்கிறது’ என்று கூறினேன்.

அந்தச் சமயத்தில், நான் எம்.ஜி.ஆருடன் பழகியதன் காரணமாக, என்னை சந்தித்த ஜேப்பியார், ‘ரியல் எஸ்டேட்’ தொழில் தொடங்கும்படி கூறினார். நான் இன்று நன்றாக இருக்க அவர்தான் காரணம். அவர்தான், தனியார் வங்கிகளில் எனக்காக கையெழுத்துப் போட்டு, கடன் வாங்கிக் கொடுத்தார்.

ரியல் எஸ்டேட் தொழில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது.’இவ்வாறு ராஜேஷ் கூறினார்.

ரியல் எஸ்டேட் தொழிலுடன், தொடர்ந்து நடிப்பில் முத்திரை பதித்து வரும் நடிகர் ராஜேஷ், ‘ஆட்டோகிராப்’ படத்தில் சேரனின் தந்தையாக நடித்து இருந்தார். படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாகியது.

தொடர்ந்து ‘பரமசிவன்’ படத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் ராஜேஷ் நடித்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

‘நான் 1982-ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் டெலிவிஷன் தொடரில் நடித்தேன். தொடர்ந்து நடித்து வருகிறேன்.அப்போது, ‘சினிமாவில் நடித்து விட்டு, டெலிவிஷன் தொடரில் நடிக்கிறாயே!’ என்று பலர் என்னிடம் கேட்டார்கள்.

அதற்கு நான், ‘சினிமாவின் குழந்தைதான் டெலிவிஷன். அது எதிர்காலத்தில் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்கும். சினிமாவுக்கு போட்டியாக வரும்’ என்றேன். அதுதான் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது.’

இவ்வாறு ராஜேஷ் கூறினார்.

ராஜேசுக்கு வாஸ்து ஜோதிடம், நாடி ஜோதிடம், ஜாதகம் போன்றவையும் தெரியும்.ராஜேசுக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும், நடிகர் சங்கத்தின் ‘கலை செல்வம்’ விருதும் கிடைத்து உள்ளன.

1984, 1985-ம் ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதுகிடைத்தது.

ராஜேஷின் மனைவி பெயர் ஜோன்செல்வியா. மகள் திவ்யா, மகன் திலீப் பார்ட்டகஸ்.இயக்குனர் மகேந்திரன், நடிகர் ராஜேஷின் அத்தை மகன் ஆவார்.

நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றீர்களா உங்களை,உங்களது வியாபாரத்தை விளம்பர படுத்திக்கொள்ள இதோ முற்றிலும் இலவசமாக ஒரு அறிய வாய்ப்பு .google bing yahoo ask போன்ற இணையதளங்களில் உங்களளது விளம்பரம் முதல் வரிசையில் தெரியும்,இங்கேஅருகில் தெரியும் Adskhan கிளிக் செய்து post செய்யவும்

Advertisements

One thought on “150 படங்களில் நடித்த ராஜேஷ்: கை கொடுத்த தொழில் ‘ரியல் எஸ்டேட்’

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s